பிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.

தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூபாய் ₹ 2.34 கோடி மதிப்பிலான பிளாஸ்மா வங்கியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு சி.விஜயபாஸ்கர்  தொடங்கி வைத்தார்.அப்போது கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்த  பரமக்குடி தொகுதி எம்எல்ஏ சதன் பிரபாகர்  முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் அவர்கள் கொரனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்பதற்கு  முன்னுதாரணமாக பிளாஸ்மா தானம் வழங்கியதற்க்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *