பேஸ்புக்கில் ஆபாச வீடியோ நடிகை போலீசில் புகார்

மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், அனுமோல். பிறகு தமிழுக்கு வந்த அவர் கண்ணுக்குள்ளே, சூரன், திலகர், ஒருநாள் இரவில் போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் இயங்கி வந்த அவருக்கு சில ரசிகர்கள் அருவெறுப்பான படங்களையும், ஆபாச  வீடியோக்களையும் அனுப்பி வைத்தார்களாம். அதைப் பார்த்து மனம் வெறுத்த அனுமோல், அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். என்றாலும், தொடர்ந்து சில ரசிகர்கள் ஆபாசமான படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அனுமோல், “இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற சிலரால்தான் சமுக வலைத்தளங்கள் பக்கம் வருவதற்கு பெண்கள் அஞ்சுகிறார்கள்.

எனக்கு போட்டோக்கள் அனுப்பிய அவர்களுக்களை பலமுறை கண்டித்தும் அதையும் மீறி சிலர் ஆபாச படங்களை அனுப்பி படி தவறை செய்துகொண்டே இருக்கிறார்கள். இதற்கு பிறகும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். எவ்வளவு பேரைத்தான் நான் பிளாக் செய்துகொண்டே இருப்பது? எனவே, அவர்களைப் பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *