போகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

போகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

போகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, போகலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.65.00 லட்சம் மதிப்பீட்டில்  அண்ணாநகர், அருந்ததியர் காலனியில் சிமெண்ட் சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,வேளாண் சுத்தி முனியப்ப சுவாமி கோவிலுக்கு மெட்டல் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் முடிவடைந்து. இன்று, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அண்ணாநகர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிய பெருந்தலைவர் சத்திய குணசேகரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு  மாலை அணிவித்து அமோக வரவேற்பு அளித்தனர்.  ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக பொருளாளர் குணசேகரன், ஒன்றிய துணைச் சேர்மன் பூமிநாதன்,போகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன், கணேசன், கார்த்திக், ஆறுமுகம் இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஜயராஜா, முத்துக்கிருஷ்ணன்,பாலமுருகன், வீரசேகர், முத்தரசு, கோபு, ராஜசேகர், முருகன், ஆனந்த், மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *