போகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

போகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்தில் தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர்  சஞ்சய்காந்தி ஏற்பாட்டில் இனிசேரி ,ஆனைகுடி, திருவாடி ,தெய்வேந்திர நல்லூர் ,முத்துவயல், மென்னந்தி, உரத்தூர் , மஞ்சக்கொல்லை ,செவ்வூர் ,கவிதைகுடி, சத்திரக்குடி ,மேலச்செல்வனூர், வீரவனூர் ,அரியகுடி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க .பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி அனைவரையும் வரவேற்றார் .விழாவில் மாற்று கட்சியை சேர்ந்த 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர் .அவர்களை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பொன்னாடை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். இதில் போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்தியா குணசேகரன் ,துணை தலைவர்   வழக்கறிஞர்    பூமிநாதன் ,ஒன்றிய பொருளாளர் குணசேகரன், போகலுர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன். மாவட்ட கவுன்சிலர் முருகேசன்,  ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு  அமைப்பாளர் விஜயராஜா  உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *