போகலூர் ஒன்றிய திமுக சார்பாக கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய திமுக சார்பாக, திமுக முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் குணசேகரன் ஏற்பாட்டில், சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது . ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த ஏழை எளிய மக்களுக்கு காய்கறி தொகுப்பு மற்றும் அரிசி வழங்கப்பட்டது .        இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினரும்,போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூமிநாதன். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, திமுக நிர்வாகி வேதாளம், கார்த்திக்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் விஜய ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் கட்சியினருக்கு  இனிப்பு வழங்கி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *