போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

 

கண்டமனூர் சத்யாநகர் காலனியை சேர்ந்தவர் கண்ணன் வயது 23இவர் ஈரோட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது கண்டமனூர் அருகே உள்ள கோவிந்தநகரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து கண்ணனுக்கும் சிறுமிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்யாநகர் காலனியில் கண்ணனின் பெற்றோர் உதவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர் இந்த பாலியல் திருமணம் குறித்து கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேலும் பாலியல் திருமணத்திற்கு உதவி புரிந்த கண்ணனின் பெற்றோர் தங்கச்சாமி, ராமுதாய் மற்றும் உறவினர்கள் ஈஸ்வரன், தங்கவேல், அடைக்கலம் ஆகியோரை தேடி வருகின்றனர் இதனால் கண்டமனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *