போராடி போகலூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய திமுக…. ஆளும் கட்சியினர் ஆதரவில் அட்டகாசம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்டது போகலூர் ஊராட்சி ஒன்றியம்.8 ஒன்றிய கவுன்சிலர்ளுக்கான தேர்தலில் 5 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி சார்பாக பிஜேபி 1, 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பாக போட்டியிட்ட 7 ஒன்றிய கவுன்சிலர்கள் படுதோல்வியை சந்தித்தனர். 5 இடங்களைப் பெற்ற திமுக ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், ஆதிமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரும்,முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மைத்துனரான ராமசாமி தலைமையில் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை கைப்பற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் கடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஒன்றிய பெரும் தலைவருக்கான தேர்தலின் போது, அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் ராமசாமி வெற்றி பெறுவதற்காக. திமுக ஒன்றிய செயலாளராக உள்ள ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், திமுக ஒன்றிய கவுன்சிலர் பூமிநாதன் வாக்களிக்கச் செல்லும் பொழுது மறைத்து வைத்திருந்த மையை தூக்கி எறிந்து தேர்தலை தடுக்க முயற்சி செய்தார். இதனால், ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் பூமிநாதன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தேர்தலை ஒத்தி வைப்பதற்காக அதிகாரிகள் முயற்சித்தபோது பூமிநாதன் தலைமையிலான திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் தொடர்ந்து தேர்தலை நடத்துமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். மை எறிந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு தேர்தலை நிறுத்துவதற்காக ராமசாமி மற்றும் பிஜேபி வேட்பாளர் காளிதாஸ் ஆகியோர் தேர்தல் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறினர். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது வாக்களிக்கும் நேரத்தை விட தாமதமாக வந்ததால் பிஜேபி வேட்பாளர் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் திமுக 4 வாக்குகள் பெற்று ஒன்றிய பெருந்தலைவர் கைப்பற்றியது. ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதை அறிவிக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஜேபி வேட்பாளர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானதால் போகலூர் ஒன்றியத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்படுத்தியது.முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும்,தற்போது ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூமிநாதன் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளிடம் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மறுபுறம் திமுகவினர் வெற்றி பெற்றதை அறிவிக்காத தேர்தல் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இந்த செய்தி அனைத்து தொலைக்காட்சிகளிலும் உடனடியாக ஒளிபரப்பப்பட்டதால், மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியரருமான வீரராகவ ராவ் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் முடிவை அறிவிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் ஒன்றிய குழு தலைவராக சத்தியா குணசேகரன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலை நிறுத்தி அதிமுக எடுத்த முயற்சிகளை உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் போன்ற கடுமையான போராட்டத்திற்கு பிறகு திமுக ஒன்றிய பெருந்தலைவர் பதவியை கைப்பற்றியது.

“”

போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளாத அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ராமசாமி ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இவர்கள் இடம் டிஎஸ்பி. கள் சங்கர் வெள்ளைத்துரை ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அதிமுக ஆதரவாளர்கள் பஸ் மறியலை கைவிட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *