போலி  IAS அதிகாரி கைது. அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி.

 திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் நாவப்பன் அவரது நன்பர் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளாக நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் தயாரித்த  போலி கடிதம் அச்சு அசலைப்போலவே இருக்கிறது. இதை நம்பி அரசு அதிகாரிகள் பதில் அனுப்பியதுதான் அதிர்ச்சி.
நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய இருவரும் ஐஏஎஸ் அதிகாரி மாதிரி போலியாக ஐடி கார்ட், விசிட்டிங் கார்டு அடித்து மோசடி செய்ததுள்ளனர். மேலும்,
ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தெரியவந்தது. நாகப்பன் என்பவர் அரசு துணைச் செயலாளர் போல் நடித்தும், ஜார்ஜ் பிலிப் சுகாதார உதவியாளர் என்றும் மோசடி செய்துள்ளனர்.இதையடுத்து 406, 420 ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நாவப்பனை கைது செய்துள்ளனர். ஜார்ஜ் பிலிப்பை தேட ராமநாதபுரம் எஸ்பி வருண் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திரைப்பட பாடகர் வேல் முருகனுக்கு செய்தி துறையில் பணி வழங்க அனுமதி கடிதம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *