மகசூலை அதிகரிக்க அங்கக வேளாண்மையில் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். விதை பரிசோதனை அலுவலர் தகவல்.

சுற்றுப்புற சூழலை காக்கும்,மகசூலை அதிகரிக்கவும் அங்கக வேளாண்மையில் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என  விதை பரிசோதனை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்
 ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள், பயிர் ஊக்கிகள் ஆகியவற்றை தவிர்த்து விட்டு விவசாயம் செய்வதே  அங்கக வேளாண்மை. இது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி முறையாகும். பயிற்ச்சுழற்ச்சி அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலை காத்து  பயிர் வளர்ககூடிய  முறையாகும். தற்போதுள்ள சூழலில், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவை உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது  முக்கிய தேவையாகும். உணவு உற்பத்தியைக் கூட்ட செயற்கை இடு பொருட்களை மிகுதியாக பயன்படுத்தியதால்,மண் வளம் பாதிப்படைந்து உற்பத்தித்திறன் குறைந்துள்ளது. எனவே, சுற்றுச் சூழல் மற்றும் மண் வளத்தை காப்பதற்கு அங்கக வேளாண்மையை மேலாண்மை முறையே  தீர்வாகும் .அங்கக வேளாண்மையில் குறைந்த அளவில் கிடைக்கும் மகசூலை பல்வேறு மேலாண்மை முறைகள் மூலம் கூட்ட முடியும். மேலாண்மை முறைகள் பல்லுயிர்களின் பெருக்கத்தை கூட்ட இயற்கை உரங்களை மிகுதியாகப் பயன்படுத்துதல், நன்மை செய்யும் உயிரிகளை பெருக்க ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல், தானிய வகைகள் மற்றும் இதர பயிர்களை பயறு வகைப் பயிர்களுடன் பயிர் சுழற்சி சாகுபடி செய்தால் மண்ணில் தழைச்சத்து நிலைநிறுத்தப்படும். மேலும், கலைகள் கட்டுபடுவதால்  ஏற்படும் சத்துக்களின் இழப்பு தவிர்க்கப்படும். பயிர்க்கழிவுகளை மட்கச் செய்து உரமாக பயன்படுத்தினால் மண் வளம் மேம்படுவதுடன், பூச்சிகளின் தாக்குதலும் குறையும். பயிர்க்கழிவுகளை மண்புழு உரமாகவே கம்போஸ்ட் உரமாகவே மாற்றி பயன்படுத்தலாம்.
இயர்பியல் முறைகளான நில போர்வை அமைத்தல் சட்டிக்கலப்பை, களை கட்டுப்பாட்டுகருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை கூட்ட முடியும். உயிரியல் முறைகளின் முக்கியக் கூறுகளான பூச்சிகளை கட்டுப்படுத்தும் விந்தைப் பொறிகளை அமைத்தல், பூச்சி தாக்குதலை தாங்கும் ரகங்களை பயிரிடுதல், பஞ்சகவ்யா மீன் அமிலம் போன்றவற்றை பயன்படுத்துதல், மூலம் விளைச்சலை கூட்டலாம் . பயிர் இடைவெளி பருவத்தில் விதைத்தல் மக்கியதொழுஉரம் ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகிய ஒருங்கிணைந்த பண்ணைய உழவியல் முறைகள் மூலம் விளைச்சல் கூட்ட முடியும் மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மூலம் கழிவுகள் சரியான முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. எரிசக்தி சேமிக்கப்படுகிறது. மண்வளம் காக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெருகுவதால் பொருளாதார நிலை மேம்படுவதுடன்,  கூடுதலாக மகசூலைப் பெறலாம்  என விதை பரிசோதனை அலுவலர் சிங்காரலீலா மற்றும் வேளாண்மை அலுவலர் ஜெயந்திமாலா ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *