மதக்கலவரத்தை தூண்டும் எச். ராஜா மீது நவாஸ்கனி எம்பி புகார்.

ராமநாதபுரத்தில் கடந்த 31 ஆம் தேதி ஒரு கும்பலால் அருண் பிரகாஷ் என்ற  குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் இஸ்லாமிய இளைஞர்கள்உள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பாஜகவினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அருண் பிரகாஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா  ராமநாதபுரம் வந்தார்.  அப்போது… ராமநாதபுரம் மாவட்டத்தில்  இந்துக்கள் கொல்லப்பட்டு வருவதாகவும். இதற்கு, காரணமாக இருக்கக்கூடிய ராமநாதபுரம் எம். பி நவாஸ்கனியை கைது செய்ய வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வெளிநாட்டினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆகையால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பேசி இருந்தால்.இதற்கு,  ராமநாதபுரம் மாவட்ட திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தை உருவாவதற்கு விஷமத்தனமாக பேசிவரும் ஹெச். ராஜா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் எம்பி நவாஸ்கனி புகார் அளித்தார். மேலும், அவர் மீது கிரிமினல் மற்றும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *