மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் – சுதந்திரம் தினத்தில் 74 மரக்கன்றுகளை நடவு செய்த இளைஞர்கள்.

ஊரடங்கு உத்தரவால் சுதந்திர தினம் கொண்டாட முடியாததால் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக சுதந்திரத்திர தினத்தில்  74 மரக்கன்றுகளை நடவு செய்த கிராம இளைஞர்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் ஒன்றினைந்து மரம் வளப்பின் முக்கியத்துவம் குறித்து 74 மரக்கன்றுகளை நடவு செய்தனர். நாடு முழுவதும் இன்று 74 வது சுதந்திர தினம் கொண்டாடபடுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்றால் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழிமுறைகளை பின்பற்றி தேசிய கொடி ஏற்றபட்டது.
சுதந்திர தினம், குடியரசு தினங்களில் வழக்கம் போல் தேசிய கொடியை ஏற்றி, வாழ்த்துகளை பறிமாறி கொண்டதுடன் நிற்காமல் பரமக்குடி அருகே காந்தி நகரை சேர்ந்த இளைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தொற்றால் வீட்டிற்குள் முடங்கியுள்ள இளைஞர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து மரக்கன்றுகளை நடவு செய்தனர். காந்திநகர் நகராட்சி பள்ளியில் தேசிய கொடியை ஏற்றினர். தொடர்ந்து பள்ளி வளாகம் அருகில் இளைஞர்கள் ஒன்றிணைந்து 74 வது சுதந்திர தினத்தில் 74 மரங்களை நடவு செய்தனர். வறட்சி பாதித்த ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையின்றி விவசாயம் பாதிக்கபட்டு வருகிறது. இதனால் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும், காந்திநகர் பகுதியை பசுமையாக்கும் எண்ணத்திலும் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டிருப்பதாக இளைஞர்கள் கூறினர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *