மருது பாண்டியர்களின் 271வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டிய சகோதரர்களின் 271 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்  சுதந்திர போராட்ட வீரரும் சிவகங்கை மன்னர்   மருது பாண்டியர்களின் 271 வது  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை பரமக்குடி  சந்தை நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  வழங்கினர். முன்னதாக திருக்கொளுவூரில் உள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவர்கள். திருக்கொளூவூர் பள்ளி மற்றும் கண்மாய் பகுதிகளில் 100  மரக்கன்றுகளை நட்டனர் . பரமக்குடி சந்தைக்கடை பகுதியில் மருதுபாண்டியர்களின் திரு உருவ படத்திறப்பு மற்றும் பரமக்குடி அகமுடையார் களம் சங்கம் துவக்க விழா நடைபெற்றது . அதில் பொதுமக்களுக்கு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் புங்கை,வேம்பு, புளியமரம்,இலுப்பை மர கன்றுகளை பரமக்குடி சந்தை நண்பர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *