மலேசியப் பிரதமர் தெரிவித்த கருத்து சரியானது அல்ல பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி.

இந்திய குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் தனது நெருங்கிய நண்பரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவின் நிலைபாட்டில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார்  மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர்  ராமசாமி.

 

 

குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதுமில்லை என்றும், இவ்விவகாரம் தொடர்பில் மலேசியப் பிரதமர் தெரிவித்த கருத்து சரியானது அல்ல என்றும் பிபிசி தமிழிடம் பேசிய போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

“இந்தியா சுதந்திரம் பெற்ற போது இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு தேவை என்று வலியுறுத்தப்பட்டு, மத அடிப்படையில் பிரிந்து சென்ற நாடு தான் பாகிஸ்தான். அதே போல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவையும் இஸ்லாமிய நாடுகள்தான். இப்படிப்பட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு நிச்சயம் பாதிப்புகள் இருக்கவே செய்யும். எனவேதான் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் ஆதரவாக இந்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை,” என்கிறார் ராமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *