சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புக் கடன் ஐ.ஓ.பி.

 

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), ‘கொரோனா’ தொற்று நோய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரத் தேவைகளுக்கான நிதி உதவியாக “சுய உதவிக்குழு” அங்கத்தினர்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஏப்ரல் 7 முதல் ஜூன் 30–ந் தேதி வரை அமுலில் இருக்கும்.

இந்தக் கடனைப் பெறுவதற்கு, சுய உதவி குழுக்கள், இதற்கு முன் வங்கியில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு முறை கடன் பெற்று அந்தக் கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கியின் விதிப்படி, தற்போதுள்ள கடன்கள் தரமானவை மற்றும் கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி வரை செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் மட்டுமே இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியுடையவர்கள் ஆகும்.

இந்த கடனைப் பெறுவதற்காக சுய உதவிக்குழு கடன் வாங்குபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கிளைக்கு நேரடியாகவோ அல்லது வணிக பிரதிநிதி மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தகுதியுடைய குழுக்களுக்கு கடன் தொகை சுய உதவிக் குழுவின் சேமிப்புக் கணக்கில் வழங்கப்படும். குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்ச கடன் தொகை ரூ. 5 ஆயிரம் அடிப்படையில், குழுவுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை தொகை கடனாக வழங்கப்படும்.

சுய உதவிக்குழு விண்ணப்பம் கிளையில் சமர்ப்பித்த நாளிலிருந்து ஆறு வேலை நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு கடன் அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், சலுகை வட்டி அடிப்படையில், ஆறு மாத ஆரம்ப விடுப்புக் காலத்திற்குப் பின்னர் முப்பது மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தப் படவேண்டும்.
. *❈•┈•❀? ❈ɢᴜʟғ ɴᴇᴡs❀•┈•❈*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *