நயினார்கோவில் பகுதிகளில் காட்டு மாடுகளை வலைவிரித்து பிடித்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு.ஒருவர் கைது. 

 பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் பகுதிகளில் காட்டுமாடுகளை வலைவிரித்து பிடித்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். வலை விரித்து பிடித்து 2 மாடுகளை போலீசார் காட்டுபகுதிக்குள் விட்டனர்.
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பனையூர்  கிராமப்பகுதிகளில் அதிக காடுகளை உடையதாக இருக்கிறது.இந்தப் பகுதிகளில் மான்,மயில், காட்டுமாடுகள் உள்ளிட்ட விலங்குகள் அதிகமாக நடமாடி வருகிறது. இந்த நிலையில்,மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பல்  காட்டு மாடுகளை வலை விரித்து பிடித்து ரூ. 30,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த நயினார்கோவில் காவல் நிலையஉதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று, காலை பணையூர் காட்டுப்பகுதிகளில் மாடுகளை பிடிப்பதற்காக வலை விரிக்கப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சோதனையிட்டனர். அப்போது, டி கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பவியரசன் (30) தலைமையிலான ஒரு கும்பல் காட்டு மாடுகளை பிடித்து வைத்திருந்தனர். போலீசாரை கண்டவுடன் மாடுகளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள். அப்போது, போலீசார் பவியரசனை விரட்டி பிடித்தனர். வலை விரித்து பிடிக்கப்பட்ட நான்கு காட்டு மாடுகளில் இரண்டு காட்டு மாடுகள் இறந்துவிட்ட நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. மேலும் இரண்டு மாடுகள் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். இதுகுறித்து பனையூர் கிராம நிர்வாக அதிகாரி பூபாலசங்கர் கொடுத்த புகாரின் பேரில் நயினார்கோவில் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பவியரசனை கைது செய்தனர்.காட்டுமாடுகளை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *