சூறைக்காற்றில் சிக்கிய படகுகள்.உரிமையாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்.

இராமேஸ்வரத்தில் இன்று  அதிகாலையில் வீசிய கடும் சூறைக்காற்றில் சிக்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதனை அறிந்த முன்னாள் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்,
டாக்டர் M.மணிகண்டன்
இராமேஸ்வரத்திற்கு விரைந்து வந்து சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு, சேதமடைந்த படகின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறி, சேதமடைந்த படகுகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சேதமடைந்த படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் அர்ச்சுனன் மற்றும்
மீனவர் சங்க தலைவர்கள்
போஸ்,தேவதாஸ் மற்றும் மீனவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *