இராமநாதபுரம் மாவட்டம் சர்வதேச உரிமை கழகம் சார்பில் ஏழைகளுக்கு நிவாரன பொருள்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள்  வேலையில்லாமல்      வாழ்வாதாரமின்றி பசியும் பட்டினியுமாக வாழ்ந்துவருகின்றனர். இந்தநிலையில்,ராமநாதபுரம் மாவட்டம் சர்வதேச உரிமை கழகம் சார்பாக மாவட்டம் தலைவர் டாக்டர் சாமுவேல்பாண்டிதுரை தலைமையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், அரிசியும்,மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.நேற்று,

பரமக்குடி வைகையாற்றின் முத்தாலம்மன் படித்துறை பகுதியில் வசிக்கும் 30 நரிக்குறவர் மக்களுக்கு அரிசி காய்கறி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா,நகர இளைஞரணி செயலாளர் ரவி,தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார்,
பார்த்திபனூர் முனியப்பன்,மகளிரணி இளமதி,உமா உள்ளிட்ட சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *