அரசு ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;

ராமநாதபுரத்தில் போலீஸ் ஒருவர், பனைக்குளத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் .உச்சிப்புளியைச் சேர்ந்த டெங்கு தடுப்பு பணியாளர் ஆகியோருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த 3 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து. சிவப்பு மண்டல பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.இந்த நிலையில் கமுதி யைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் மனைவிக்கு பிரசவத்திற்கு மதுரைக்குச் சென்றிருக்கும் நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *