தமிழக முதல்வர் மீது அவதூறு செய்தி வெளியிட்டதாக ஜூவி மீது ராமநாதபுரத்தில் புகார்.

ஜூனியர் விகடன் வார இதழில் அரசியல்ரீதியாக உள்நோக்கத்துடன் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் விதமாக 03-05-2020 தேதி வெளியிடப்பட்டுள்ள இதழில் உண்மைக்குப் புறம்பான செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.இது மக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் மற்றும் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக கட்டுரை வெளியிட்ட அதன் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கழக செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் MA.முனியசாமி அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனை கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் N.சதன்பிரபாகர், ராமநாதபுரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம் வழங்கினார்கள், உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் நாகநாதன், குப்புசாமி,முத்தைய மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் A.சரவணகுமார் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *