பரமக்குடி அருகே கோவில் பூட்டை உடைத்து தங்கத் தாலி, ரொக்கம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை.

பரமக்குடி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டுள்ளது.

பரமக்குடி அருகே மூவலூர் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.நேற்று காலை கோவிலின் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப் பட்டு
சுவாமியின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்கத் தாலி மற்றும் உண்டியல் பணம் ரூ 2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அக்கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு, இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் நயினார்கோவில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *