நயினார்கோவில் ஒன்றியத்தில் திமுக நிவாரனப் பொருள்கள் மாநில தீர்மான குழு துணைத் தலைவர் வழங்கினார்

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் திமுக சார்பாக மாநில திட்ட குழு துணைத் தலைவர் சுப.த.திவாகரன் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்தில் திமுக சார்பாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்கள், மாற்று திறனாளிகள், தூய்மை பணியாளர்கள்,ஆதரவற்ற விதவைகள் உட்பட 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் போன்றவற்றை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் சுப த. திவாகரன் வழங்கினார். அதனை தொடர்ந்து நயினார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செய்விலியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்ககப்பட்டது.. நலத்திட்ட உதவிகளை பெற வந்த பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து வந்து நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர். உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி, ஒன்றிய துணை செயலர்கள் லஷ்மணன், தங்கராஜ் ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் திருமுருகேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ்,அவைத்தலைவர் ஜீவானந்தம், மணக்குடி ஊராட்சி தலைவர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *