பரமக்குடியில் திருநங்கைகளுக்கு இன்னர் வீல் சார்பாக நிவாரணப் பொருள்கள்

பரமக்குடி அருகே வாழ்வாதாரமின்றி கஷ்டப்பட்ட திருநங்கைககளுக்கு இன்னர் வீல் சங்கம் சார்பில் சமையுலுக்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மற்றும் சுற்றுப் பகுதியில் கொரோனாவுக்கான ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சேவையாக இன்னர் வீல் சங்கம் சார்பில் சமையலுக்கான அத்தியாவசிய மளிகைபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா செந்தில்குமார் தலைமையில் பரமக்குடி அருகே லீலாவதி நகரில் வசிக்கும் திருநங்கைகளுக்கு கொண்ட கடலை, துவரம் பருப்பு கடலை பருப்பு , உள்ளிட்ட பருப்பு வகைகள், சேமியா சீரகம் ,சோம்பு ,ரவை கோதுமை, கசமையல் எண்ணெய் உள்ளிட்ட 15 வகையான வீட்டு உபயோகப் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் சமூக நலத்துறையின் மோகனப்பிரியா மற்றும் மங்கையர்க்கரசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன் திருப்புல்லாணி, மண்டபம் பகுதியில் உள்ள மீனவ விதவைப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள்,ஊனமுற்றேர் உள்ளிட்ட. குடும்பத்தினர்களுக்கும் வழங்கபட்டது.இதுவரை 250 குடும்பத்தினர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

– செள.திலிப்
செய்தி பிரிவு 9944214100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *