கொரோனா தடுப்பு பணி மருத்துவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை.

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களை பாராட்டி இந்திய ராணுவம் சார்பாக ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு பணிகளில்  டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ,காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு பிரிவில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் போலீசாருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று குணமடைந்த சில டாக்டர்கள் மீண்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களை பாராட்டும் விதமாக இந்திய ராணுவத்தின் சார்பாக ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஸ்டாலின் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் பணியாற்றிவரும் டாக்டர்கள் செவிலியர்கள் களப்பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *