ராமநாதபுரம் அம்மா உணவகத்திற்கு மணிகண்டன் எம்எல்ஏ நிதி உதவி.

தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம் நகரில் உள்ள அம்மா உணவகத்தில் தனது தொகுதி மற்றும் பொதுமக்கள் மக்கள் ஊரடங்கு வேளையில் சிரமமின்றி இலவசமாக உணவு உட்கொள்ளும் வகையில் இன்று முதல் மே 17-ம் தேதி வரை 14 நாட்களுக்கு மூன்று வேளைகளிலும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கான முழு செலவினை ராமநாதபுரம் நகராட்சிக்கு ரூபாய் எழுபதாயிரத்தை(Rs.70,000), கழக மருத்துவரணி துணை செயலாளரும், இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எம். மணிகண்டன் நகராட்சி ஆணையாளரிடம் காசோலையை வழங்கினார். உடன் அஇஅதிமுக ராமநாதபுரம் நகர் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *