அம்மா உணவகத்திற்கு 2.10 லட்சம் நிதி உதவி எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்

தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி , ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அம்மா உணவகங்களுக்கு

தனது தொகுதி மற்றும் பொதுமக்கள்  மக்கள் ஊரடங்கு வேளையில் சிரமமின்றி இலவசமாக உணவு உட்கொள்ளும் வகையில் மே 4 முதல் மே 17-ந்தேதி வரை 14 நாட்களுக்கு  மூன்று வேளைகளிலும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கான முழு செலவினை ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகளுக்கு  தலா ரூபாய் எழுபதாயிரமும்(Rs.70,000) மொத்தம் ரூ.2,10,000 யை, அ.இ.அ.தி.மு.க கழக மருத்துவரணி துணை செயலாளரும், இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எம். மணிகண்டன் அவர்கள் நகராட்சி ஆணையாளர்களிடம் காசோலைகளை வழங்கினார். உடன் நகர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *