ஒன்றிணைவோம் வா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சத்தியா குணசேகரனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஒன்றிணைவோம் வா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய  ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய, உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் ,விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை போக்கும் விதமாக ஒன்றிணைவோம் வா  என்ற திட்டத்தினை தொடங்கி காணொலி காட்சி மூலம்  ஒவ்வொரு மாவட்ட வாரியாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

             

நேற்று, ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,  ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரிடம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்தியா குணசேகரனிடம் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒன்றிய அளவில் நிவாரணம் வழங்கும் பணிகள்  திருப்திகரமாக இருப்பதாகவும் ஒன்றிணைவோம் திட்டத்தில் உள்ள பதிவு செய்தவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும், மக்களுடைய தேவைகளை அறிந்து உடனடியாக உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் அப்போது அவருடன் திமுக ஒன்றிய பொருளாளர் குணசேகரன் உடனிருந்தார்

பரமக்குடி திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *