கொரோனா தொற்றால் தேனீர் கடைகளுக்கு பூட்டு, டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பா? – தி.மு.க.மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் கேள்வி.

 

கொரோனா தொற்றால் தேனீர் கடைகளுக்கு பூட்டு, டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பா? – தி.மு.க.மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் கேள்வி.
பரமக்குடியில் தி.மு.க.மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் சுப.த.திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அதிர்ந்து போய் உள்ளன.இதனால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரமும் முடங்கிப் போய் உள்ளன.தேனீர் கடைகள் கூட திறக்க விடாமல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு மக்களை பற்றி சிந்திக்காமல் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது.இது கண்டிக்கத் தக்கதாகும்.
 தற்போது கொரோனா பரவல் தீவிரமாகி வரும் இத் தருணத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே திறந்து அதன்மூலம் கொரோனா பரவ வழிவகுக்கிறது.ஏழை – எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் செயலாகும். வறுமையில் உள்ளவர்கள் உணவின்றி தவிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு என்ற பெயரில் தரமற்ற உணவை வழங்குகின்றனர்.அந்த உணவில் கல், காரம்இருப்பதாகவும், உணவை சரியாக வேக வைக்காமல் வழங்குவதால் அந்த உணவை சாப்பிடாமல் கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.இதனால் அங்கு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
அதேபோல் தற்போது பத்திரப் பதிவு அலுவலகங்களை திறந்து பணிகள் நடந்து வருகிறது.அதற்கு காரணம் தற்போது நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவதற்காகத் தான். மக்களை பற்றி சிந்திக்காமல் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமா ? மேலும் கிருமி நாசினிகள் தரமற்ற முறையிலும்,பெயரளவிலும் தெளிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *