வழிபாட்டு தளங்களுக்கு தடை  டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியா? சமூகப் பரவலுக்கு வழிவகுக்கும் – முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் எச்சரிக்கை!

வழிபாட்டு தளங்களுக்கு தடை
டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியா?
சமூகப் பரவலுக்கு வழிவகுக்கும் –
முஸ்லிம் ஐக்கிய
பரமக்குடி,மே. 8 : வழிபாட்டுத் தலங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை  அனுமதிப்பதா? இது கொரோனா  சமூக பரவலுக்கு வழிவகுக்கும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் தொற்று அதிகம் இருக்கும் சூழ்நிலையில் மதுபான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது வேடிக்கையாக உள்ளது. இது சமூக பரவலுக்கு  வழிவகுக்கும். என, இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளார், மேலும்  அறிக்கைகள் கூறும்பொழுது”
கொரணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 144 தடை சட்டம் நடைமுறையில் உள்ளதால் தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு கூட அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடாமல் வீடுகளிலிருந்து தங்களது இறைவனை வணங்கி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் கொரணா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வைரஸ் தொற்றால் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படுகிறபோது டாஸ்மாக் கடைகளை திறப்பது மிகப்பெரிய சமூக பரவல் ஏற்பட காரணமாகிவிடும் என்று அரசை எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட சமூக பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு திணறிக்கொண்டு இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் டாஸ்மாக் கடையை திறப்பது மேலும் பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கும் எனவே வழிபாட்டுத் தலங்களுக்கு தடைவிதித்து விட்டு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று முஸ்லிம் ஐக்கிய ஜமாத் கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *