முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுக்கடை திறப்பிற்கு  பரமக்குடியில் கருப்பு பட்டை அணிந்து திமுகவினர் எதிர்ப்பு

திமுக  தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில்  தமிழகத்தில் மதுபானக் கடையை திறப்பதற்கு தெரிவித்து பரமக்குடி பகுதிகளில் திமுகவினர் கருஞ்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

 தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடும் கூடிய மதுபான கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று முதல் மதுபான கடைகள் செயல்படத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சியினர் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு அறிவித்திருந்தார். இந்த நிலையில் பரமக்குடியில் முன்னாள் மாவட்டச் செயலாளரும் மாநில தீர்மான குழு துணைத் தலைவருமான சுப.த.திவாகரன் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி மாவட்ட துணை மாணவரணி அமைப்பாளர் ராமபாண்டி,நகர மாணவரணி அமைப்பாளர் ராமதாஸ,நகர நிர்வாகி கோதண்டராமன்  ஆகியோர் கருப்புச்சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷமிட்டனர். அதைப்போல் நயினார்கோவில் ஒன்றிய பகுதியில் உள்ள திமுக.,வினர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குமரகுரு தலைமையிலான திமுகவினர் தமிழக அரசுக்கு மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச்சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தனர் போகலூர் ஒன்றியத்தில் ஒன்றிய திமுக பொருளாளர் குணசேகரன் தலைமையில் ,மாவட்ட கவுன்சிலர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன்  ஆகியோர் கருஞ்சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.பரமக்குடி நகர் செயலாளர் சேதுகருணாநிதி தலைமையில் நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார் மற்றும் திமுகவினர்  மணி நகர் பகுதியில் கருஞ்சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *