பொள்ளாச்சி நாகர்கோவிலில் தொடர்ந்து மதுரையிலும் பள்ளி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேரிடம் விசாணை.

 

மதுரையில் பள்ளி கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, மதுபோதையில் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் சம்பவத்தை தொடர்ந்து மதுரையிலும் இதுபோன்ற நடந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் செல்போனில் பேசிய  இளைஞர் தன்னிடம் அதிகப்பணம் இருப்பதாகவும் நான் சொல்வதைக் கேட்டு  பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அதிக பணம் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக மதுரையைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது மதுரை தல்லாகுளம் பகுதியில் டிரேடர்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் 3 வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகளை குறிவைத்து செல்போன்களை பெற்றுள்ளனர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, நேரில் வரவழைத்து பணம் வைத்துக்கொண்டு பிரியாணி உள்பட அறுசுவை உணவுகளை கொடுத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர் .நன்கு பழகி அவர்களை ஊர்சுற்ற அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளனர் குளிர்பானங்களில் போதை மாத்திரைகளை கொடுத்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோ பதிவு செய்து .அதனை காட்டி காட்டி  தொடர்ந்து மிரட்டி பாலியல் தொழில் செய்து உள்ளனர். மேலும், விடுதியில் இருக்கும் மாணவிகளுக்கு உணவுப் பொருள்கள் பார்சல் கொடுப்பது போல் மதுபாட்டில்கள் உள்ளது கொடுத்து சில மாணவிகளை மயக்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த  கொடூர சம்பவத்தில் பல இளம்பெண்கள் சிக்கி தனது வாழ்க்கையை இழந்து சிரிழிந்து விட்டனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது .

இந்த மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் இதில் யாரெல்லாம் தொடர்பு உள்ளனர் என்ற பட்டியலை தயாரித்து இருக்கின்றோம். இவர்கள் கடந்த மூன்று வருடமாக இதே வேலையில் ஈடுபட்டுள்ளது என்பது அதிர்ச்சிகரமான தகவல் ஆக உள்ளது. பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு சலுகைகள் என்ற முகநூல் வாட்ஸ- அப் போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து அதன் மூலம் வரக்கூடிய பெண்களை ஆசை வார்த்தை கூறி வலையில் சிக்க வைத்துள்ளார். கடந்த மூன்று வருடமாக செல்போன் கடைகளில் ரீசார்ஜ் செய்து வரும் மாணவிகள் செல்போன்களை குறிவைத்து பிடித்துள்ளனர். அவர்களளுக்கு பணம் உணவு பொருட்களை கொடுத்து வலை விரித்துள்ளனர் மாணவிகள் சிக்கியுள்ளனர் தற்போது காரணமாக விடுமுறையில் சென்றுள்ளனர் விடுமுறையில் இருக்கும் இவர்களுக்கு போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது மாணவிகள் தங்களுடைய புகார்களை நேரடியாக அல்லது தொலைபேசிவாயிலாக தெரிவித்தால், ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *