மத்திய மாநில எஸ்சி எஸ்டி ஊழியர் கூட்டமைப்பு சார்பாக  1000 விதவை ,உடல் ஊனமுற்றவர்களுக்கு கொரோனா  பேரிடர் நிவாரணம்

மத்திய மாநில எஸ்சி எஸ்டி ஊழியர் கூட்டமைப்புகள் சார்பாக  மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி உடல்

ஊனமுற்றவர்கள், விதவை மற்றும் கைவிடப்பட்டவர்கள் ஆயிரம் பேருக்கு கொரோனா  பேரிடர் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரமின்றி ஏழை  எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனைப் போக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் வீரராகவரின் அறிவுறுத்தலின்படி
இராமநாதபுரம் மாவட்ட எஸ்சி எஸ்டி ஊழியர் கூட்டமைப்புடன்   பாலு அறக்கட்டளை இணைந்து  மாவட்டம் முழுவதும் உள்ள  விதவைகள் உடல் ஊனமுற்றோர், கைவிடப்பட்ட முதியோர் என ஆயிரம் பயனாளிக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று,காமன் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன்,
போகலூர் ஒன்றியச் சேர்மன் சத்தியாகுணசேகரன்,
மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி,மாவட்டத் தலைவர்  கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார், Kபாபு தலைமை வகித்தனர்.

நிலையச் செயலாளர் காளிதாசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கவேலு, நிதிச் செயலாளர்  இராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை மாவட்ட பதிவாளர் பாலு கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். போகலூர், பரமக்குடி வட்டாரங்களில் உள்ள  காமன் கோட்டை, காக்கனேந்தல் கருத்தனேந்தல், திருவாடி, மாவிலங்கை தெய்வேந்திர நல்லூர், அரியகுடி, சத்திரக்குடி, வீரவனூர், மென்னந்தி நாகாச்சி, S.காவனூர், பொன்னையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.மத்திய மாநில SC / STஅரசு ஊழியர் கூட்டமைப்பின் நிறுவனர்/ மாநிலத் தலைவர் சமூக நீதிப் போராளி எஸ்.கருப்பையா அவர்களின் வழிகாட்டலின்படி நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில்

காமன் கோட்டை ஒன்றிய கவுன்சிலர் பாதளம் வைரவன், காமன் கோட்டை தே.கு.ப.சங்க நிர்வாகிகள் மாரி, ஊர்த் தலைவர் இராமசுப்பு, சமூகத் தலைவர் சேதுராமன், காக்கனேந்தல் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து பங்கேற்றனர் மத்திய மாநில SC / STஅரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் திரு. எஸ் கர்ணன், தலைமையில் மாவட்ட செயலாளர் திரு.V.K.சேக்கிழார், மாவட்ட பொருளாளர் திரு.Kபாபு தலைமை நிலையச் செயலாளர் S.R.காளிதாசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் C. தங்கவேலு, நிதிச் செயலாளர் ஆ.இராமர் இராமநாதபுரம் நகரச் செயலர் அழகு குமார். இராமநாதாரம் வட்டார செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பரமக்குடி வட்டாரத்தலைவர் .பூ.மாதவன் பரமக்குடி வட்டாரச்செயலாளர் K.கபில்தேவ், பரமக்குடிவட்டார செய்தி தொடர்பாளர் K.ஆனந்த், கல்வித்துறை கல்வித்துறை பொருப்பாளர் மோகன்குமார் போகலூர் வட்டாரப் பொறுப்பாளர் சரவணன் வணிகவரி அலுவலர் முருகவேல், பேராசிரியர் மணிராசு, சுந்தரவடிவேல் ஒருங்கிணைத்தனர்

மாநில அரசியல் ஆலோசகர் Lic இராஜ்குமார், அவர்களும் மாநில கொள்கைபரப்பு செயலாளர் மரியம் ஜேம்ஸ் அவர்களும் மக்களை பேரிடர் காலத்தில் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்கவலியுறுத்தினர் அனைத்து கிராமத்திலும் உள்ள தலைவா் மற்றும் மகளீர் மன்ற நிர்வாகிகள், ஆகியோர் கலந்துகொண்டனர்

நிகழ்வின்போது சங்க நிர்வாகிகளும், பயணாளிகளும் முகக் கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்றியதும், கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததும், இலவசமாக முகக் கவசங்கள் வழங்கியதும் பொதுமக்களால் சிறப்பாக பேசப்பட்டது கூட்டமைப்பின் நிர்வாகிகளை மனதார வாழ்த்தினர் நிதியுதவி அளித்து இப்பணி செய்ய ஊக்குவித்த அனைவருக்கும்  மாநிலத்துணைத் தலைவர் வே.பாலசந்திரன் மாவட்டநிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

செள.திலிப்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *