தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,63,513 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,63,513 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4458 பேர் கைது  செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 3,82,588 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை 4,37,148 வழக்குகளும், ரூ.5,17,12,279    கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4387 வழக்குகளும், ரூ.5,85,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு    வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்    ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed