குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ7,500 வழங்க வேண்டும் – பரமக்குடியில் கார்த்திக்.ப.சிதம்பரம் பேட்டி. 

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 போதுமானதாக இல்லை, ரூ.7,500 வழங்க வேண்டும் என கார்த்திக் ப.சிதம்பரம் கூறியுள்ளார்
நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அரசு ஐ.டி.ஐ.அருகில் உள்ள தொழுநோயாளிகள் குடும்பங்களுக்கும், பஸ் நிலையப் பகுதி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் நகர் காங்கிரஸ் தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நிவாரண பொருட்களை வழங்கிய எம்பி கார்த்திக்.ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில்”
ஊரடங்கு அறிவிக்கும் முன்பே மத்திய அரசு பொருளாதார நிலை குறித்து யோசித்திருக்க வேண்டும்.தனிநபர் மற்றும் சிறு தொழிலுக்கும் முன்பே நிவாரணத் தொகை அறிவித்திருக்க வேண்டும்.தற்போது ரூ 20 லட்சம் கோடி மத்திய அரசு அறிவித்துள்ளனர்.இந்த தொகை குறித்து இனிமேல் தான் அறிவிப்பதாக கூறுகின்றனர்.மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப் போகிறீர்களா? அல்லது பழைய திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டப் போகிறார்களா? என்பது தெரியவில்லை.
நேரடியாக தொழிலாளர்களுக்கு நிவாரணப் பணம் சேர்ந்தால் தான் நல்லது.ஒரு ரேசன் கார்டிற்கு ரூ 1000 கொடுத்தது எப்படி சரியாகும். குடும்பம் ஒன்றிற்கு ரூ 7ஆயிரத்தி 500 கொடுத்து இருக்க வேண்டும். மத்திய அரசு ஜன்தன் கணக்குகளை வங்கிகளில் அனைவருக்கும் துவக்கியுள்ளது. அதில் பணத்தை செலுத்த முடியும்.மேலும் அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் வங்கி கணக்குகள் உள்ளன.சமுதாய இடைவெளி கடைப்பிடிப்பது போல் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் நடந்ததாக பொறுப்புள்ள அரசியல் தலைவராக உள்ள ஸ்டாலின் கூறியது உண்மையாக இருக்கலாம்.இருப்பினும் இதனை தீர விசாரிக்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. சமுதாய இடைவெளியுடன் தேர்தலை நடத்த முடியும்.வாக்களிக்கும் நேரத்தையும், வாக்குச்சாவடி மையத்தையும் அதிகப் படுத்திக் கொள்ளலாம்.தமிழகம் அரசாங்க மாற்றத்தை விரும்புகிறது.பத்தாம் வகுப்பு தேர்வு தற்போது தேவையற்றது.அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வு மதிப்பெண்களை வைத்து உயர்நிலை கல்விக்கு அனுப்ப முடியும்.பிளஸ் டூ பொதுத் தேர்வு தேவையான ஒன்று.ஏனென்றால் அதன் மதிப்பெண்களை வைத்து தான் கல்லூரிகளுக்கு செல்ல முடியும்.தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவி வகிப்பது சோனியா காந்தி தான். சந்தேகம் இல்லை.இவ்வாறு கூறினார்.
இதில் கட்சியின் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், சோ.பா.ரெங்கநாதன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், நிர்வாகிகள் காஜா நஜ்முதீன், சேக்,ராஜா.இளைஞர் காங்கிரஸ் ரமேஸ் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *