திருவாடனை தொகுதி பசும்பொன் நகர் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள்.எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்

 தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவுறுத்தலின் பேரிலும், கொரோனா நிவாரண உதவியை அ.இ.அ.தி.மு.க. கழக மருத்துவ அணி துணை செயலாளரும்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எம். மணிகண்டன் அவர்கள் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசும்பொன் நகர் பகுதியை சார்ந்த சுமார் 1000 மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு

 

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். உடன் ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவரும், இராம்கோ தலைவருமான செ.முருகேசன், முன்னாள் நகர் மன்ற தலைவர் R.S.ராமமூர்த்தி, நகர் கழக பொருளாளர் ஜெயக்குமார், நகர் MGR இளைஞர் அணி செயலாளர் தஞ்சி சுரேஷ், MSK நகர் கிளை கழக செயலாளர்  மங்களநாத துரை, பிரதிநிதி செல்லத்துரை, ஒன்றிய இளைஞர் அணி பாலசுப்பிரமணியன், த அமைதித்துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *