மே 17 க்கு பின் திருப்பதி கோவில் திறப்பதற்கான பணிகள் தீவிரம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதனால், மாநில இந்து அறநிலையத் துறையினர், அனைத்து கோயில்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளியுடன் எல்லை கோடுகள் வரைந்து வருகின்றனர். ஏழுமலையான் கோயிலிலும் இந்த ஏற்பாடு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed