தமிழாசிரியர் கழகம் சார்பாக ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள்

தமிழகத் தமிழாசிரியர் கழகம் – இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான பரமக்குடி நகராட்சி 8வது வார்டு ஆதிதிராவிடர் காலணி பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் 5 கிலோ அரிசி, 2 கிலோ காய்கறிகள் பை என கொடுக்கப்பட்டது.இந்த நிவாரணப் பொருள்களை எஸ்பிஐ வங்கி முதன்மை மேலாளர் இராஜ்குமார் , பரமக்குடி ஓட்டபாலம் பேக்கரி உரிமையாளர் தயனேஸ் சூசைராஜ், பரமக்குடி அர்பன் கூட்டுறவு வங்கி முன்னால் மேலாளர் ராமமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர். சமூக விலகல், முகக் கவசம் அணிதல் கொரோனா தடை காலத்திற்கு பிறகும் அரசின் கட்டுப்பாட்டின் நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கிராம மக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூக்கா.குமரவேலு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ”

தற்போது மாநில அரசு ஒவ்வூதிய வயது 59 என அறிவிப்பு செய்து 2020-20 21 ஆண்டில் ஓய்வு பெறுவோர்களின் ஓய்வூதியப் பலன்கள் ஓராண்டிற்கு தள்ளிவைப்பு, . பல ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடி பெற்று வந்த உரிமைகளான. அகவிலைப்படி சரண்டர் , பணி உயர்வு புதிய இளைஞர்களின் வேலை வாய்ப்பு போன்றவைகள் 2020-20 21ஓராண்டிற்கு முடக்கம் செய்து வரும் அரசின் நடவடிக்கைகளை தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் . கொரனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும், மத்திய அரசு எந்த உத்தரவாதமும் சொல்லாத நிலையிலும் மக்கள் தொடர்ந்து தனித்து இருக்க வேண்டும், சமூக விலகலை கடை பிடிக்க வேண்டும் என ஒரு அசாதாரணச் சூழலில் மாநில அரசு வருகின்ற ஜீன் 1 ஆம் தேதி 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கொரோனா தொற்றுப் பயம் உள்ள நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு காலத்தினை தள்ளி வைக்கலாம் என்பதை தமிழகத் தமிழாசிரியர் கழத்தின் வாயிலாக தமிழக அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் . வருகின்ற மே 27 அன்று ஆசிரியர்கள் பொதுதேர்வு வினாத்தாள் திருத்தும் பணி தொடர்பாக மாநில ஜாக் டோ-ஜியோ கூடி எடுக்கும் முடிவினை எதிர்பார்த்து மாவட்ட அளவில் வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதா? என்பதை முடிவெடுப்பது என மாவட்ட ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பு வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது  என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *