மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகேசன் மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிவாரண பொருட்களை வழங்கினார்

கலையூர் கிராமத்தில்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகேசன்  சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் – தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  தொடங்கி வைத்தார் .

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமுல் படுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து வால்வாதாரத்தை இழந்து தவிக்கும் போகலூர் மாவட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள கிராம ஊராட்சி கிராமத்தினருக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகேசன் தனது சொந்த செலவில்  நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதன் தொடக்கமாக  கலையூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட  தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்  காதர்பாட்சா முத்துராமலிங்கம் 500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புக்களை வழங்கினார்.கிராம மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்,  தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி. அருளாந்து, பரமக்குடி நகர் இளைஞரணி செயலாளர் சன்.சம்பத்குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன்

முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வளையனேந்தல் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *