ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பரமக்குடி பகுதிகளில்  உணவு பொட்டலங்கள் -மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் வழங்கினார்

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பரமக்குடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில்  உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,ஏழை எளிய மக்கள் உணவின்றி பசியால் வாடி வருகின்றனர் .இதனை போக்கும் விதமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைந்து ஒன்றிணைவோம் வா என்ற  திட்டத்தின் கீழ் உணவு பொட்டலங்கள் மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.  இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் மற்றும் பரமக்குடியில் ஒன்றியப் பகுதிகளான  போகலூர், நயினார்கோவில், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் உணவின்றி பசியால் வாடும் ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கும் பணியில் மாவட்ட ஊராட்சி குழு  தலைவர் உ. திசை வீரன் ஈடுபட்டு வருகிறார். இன்று பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குறவர் இன மக்களுக்கு உள்பட  500 நபர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். இது நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ,ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன் ,பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சண்.சம்பத்குமார் ,பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் டி அ.ருளானந்த் . முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். உணவு வழங்கும் பொறுப்பினை  டிவின் ஹெல்ப் சாரிடபிள் டிரஸ்ட் உரிமையாளர் ஜெபஸ்டீன் மற்றும் அதன் அலுவலர்கள்   மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *