பரமக்குடி அம்மா உணவகத்திற்கு அதிமுக மகளிரணி கீர்த்திகா முனியசாமி 1.20 லட்சம்  நிதியுதவி.

பரமக்குடி நகராட்சியின் கீழ் செயல்படும் அம்மா உணவகத்தில் மூன்றாம் கட்டமாக  இலவசமாக  உணவு வழங்குவதற்காக மாவட்ட அ.தி.மு.க .,சார்பாக 1.20 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
பரமக்குடி பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.இங்கு ககாலை,மாலை,இரவு ஆகிய 3 வேளைகளிலும் நகராட்சி சார்பில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப் பட்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவினால் அங்கு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மூன்றாம் கட்டமாக  மே 31 ம் தேதி வரை அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் அனைவருக்கும் தினமும் 3 வேளை உணவை இலவசமாக வழங்க ரூ 1.20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகிய இருவரும் நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமாரிடம் வழங்கினர்கள்.உடன் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *