ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் அம்மா உணவகங்களுக்கு ரூ.2,10,000- மணிகண்டன் எம்எல்ஏ வழங்கினார்

தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,  ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அம்மா உணவகங்களில், தனது தொகுதி பொதுமக்கள் ஊரடங்கு வேளையில் சிரமமின்றி இலவசமாக உணவு உட்கொள்ளும் வகையில்,

மே 18 முதல் மே 31-ம் தேதி வரை 14 நாட்களுக்கு மூன்று வேளைகளிலும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கான முழு செலவினை ஏற்றுக்கொண்டுள்ள ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன். மூன்றாம் கட்டமாக  ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகளுக்கு தலா ரூ.70,000 வீதம் ரூ.2,10,000 நகராட்சி ஆணையாளர்களிடம் காசோலைகளை வழங்கினார்.

உடன் நகர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். —செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *