சத்திரக்குடி வட்டார வேளாண்மை அலுவலகத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் மானியத்தில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டது .

சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பாக 2017-18 முதல் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-18 -ல்  5 குழுக்களுக்கு ரூ. 25 லட்சம் மானியம் வழங்கப்பட்டது . 2018 -19 ல் 3 குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மானியமானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாய கருவிகள் மூலமாகப் பெறப்பட்ட வாடகை தொகை ரூ.1.50 லட்சம் மற்றும் கடந்த ஆண்டிற்கான ரூ.50 ஆயிரம் பெறப்பட்டு, அந்த தொகையை வசூலிக்கப்பட்டு அதை அந்த குழுக்களே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம் இயந்திரங்களில் ஏற்படும் சிறு பொழுதுகளை  சரி செய்வதற்கான செலவும், உள்ளீட்டு கடனாக வட்டிக்கு கொடுக்கப்பட்டு வருமான ஈட்டப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற விழாவில்         முத்துவயல் மற்றும் கோரைகுளம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.14.20  லட்சம் மதிப்பில் டிராக்டர் மற்றும் விவசாய உற்பத்திப் கருவிகள் வழங்கப்பட்டது. இதனை   வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா வழங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் கண்ணையா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( வேளாண்மை ) தனுஷ்கொடி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி மற்றும் போகலூர் வட்டார வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், மஞ்சூர் கிராமத்தில் உள்ள உளுந்து விதை பண்ணையை வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.
-செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *