மற்ற மாவட்டங்களில் டெண்டர் நடந்த நிலையில்  குதிரை பேரத்தில் கிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? 

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் பராமரிப்பு பணிகளுக்காக டெண்டர் விட்ட நிலையில், ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குதிரை பேரம் பேசுவதால் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்ட  பராமரிப்பு பணி டென்டர்.  குடிநீர்  கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

 ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு திமுக அரசின் சார்பாக ரு. 650 கோடி செலவில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்து பொதுமக்கள்  பயன்பெற்று வந்தனர். பின்னர்அதிமுக.,அரசு முறையான பராமரிப்பு இல்லாமல் விட்டுவிட்டதால் பல இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்து தினமும் பல லட்சம் லிட்டடர் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்வதற்காக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இரண்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, இராமநாதபுரம் வட்டத்தில் நயினார்கோவில், கடலாடி பரமக்குடி உள்ளிட்ட யூனியனிலும் .சிவகங்கை வட்டடத்தில் உச்சிபுளி ,ஆர்எஸ் மங்கலம் ,திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலும் பராமரிப்புக்காக டெண்டர் விடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு வட்டங்களுக்கும் தனித்தனியாக பராமரிப்பு ஒப்பந்த டெண்டர்கள் வெளியிடப்பட்டு, அதன் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பராமரிப்பு பணிகளை செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர்களின் ஒப்பந்த முடிந்ததால், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை வட்டத்தின்  கீழ் உள்ள கிராம பகுதிகளில்  பராமரிப்பு இல்லாமல் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.
இதனால், நயினார்கோவில் பரமக்குடி கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் காவேரி தண்ணீர் இல்லாமல், கண்மாய் மற்றும் உப்பு தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வருகின்றனர் வசதிபடைத்தவர்கள் தினமும் குடம்  ரூ.20 முதல் 50 வரை கொடுத்து வண்டியில் வரும் தண்ணீரை பிடித்து தாகம் தீர்த்து வருகின்றனர்.  ராமநாதபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ. 49 லட்சம் சிவகங்கை வட்டத்திற்குள் வரக்கூடிய உச்சபுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு 50 முதல் 70 லட்சம் வரை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம்  பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா கால காட்டங்களில் அவசியத்தின் அடிப்படையில் கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளுக்கு   டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டு நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை வட்டத்தில்  கொரோனா  காரணம் காட்டி குதிரை பேரம் பேசிக்கொண்டு 6 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும்  டெண்டர் விடாமல்    ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட. கிராமங்களில் கூட்டு குடிநீர் தண்ணீர் கிடைக்காமலும்,  400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போதுமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ,நடக்கவேண்டிய டெண்டர் நடைபெறாமல் கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது ,  ராமநாத மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்  ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் குதிரை பேரம் பேசிக்கொண்டு டெண்டர் விடாமல் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகம் தடைபடுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறும்போது ” அத்தியாவசிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய ஒப்பந்த டெண்டர்களை  நடத்தாமல் குதிரை பேரம் பேசிக்கொண்டு  காலம் கடத்துவது சரியல்ல.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக  தலையிட்டு அத்தியாவசியமாக கிடைக்கக்கூடிய அடிப்படைத் தேவையான குடிநீரை வினியோகம் செய்வதற்கு உடனடியாக. ஒத்திவைக்கப்பட்ட டெண்டரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *