பரமக்குடி ஒன்றிய பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை- மாவட்ட செயலாளர் செந்தில் செல்வனந்த் வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி கடலாடி ராமேஸ்வரம் ராமநாதபுரம் திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளன ஏழை எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு காய்கறி மற்றும் அரிசி உள்பட நிவாரண பொருட்களை மாவட்ட சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றூ,   பரமக்குடி ஒன்றிய நிர்வாகம் சார்பில்  பார்த்திபனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து,

பார்த்திபனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட செயலாளர் செந்தில் செல்வனந்த் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *