கடமலை மயிலை ஒன்றியத்தில் பலத்த சூறைக்காற்று வாழை மரங்கள் தென்னை மரங்கள் பலத்த சேதம் விவசாயிகள் கண்ணீர்

கடமலை மயிலை ஒன்றியத்திறகுட்பட்ட வருஷநாடு பசுமலைத்தேரி, சிங்கராஜபுரம், செல்வராஜபுரம், ஒத்தகுடிசை, மயிலாடும்பாறை கடமலைக்குண்டு தும்மக்குண்டு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வாழைமரங்கள், தென்னைமரங்கள், இலவமரங்கள், கொட்டைமுந்திரி, தக்காளி, கத்தரி, அவரை, முருங்கை, உள்ளிட்ட விவசாய பயிர்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர் இந்நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது இதனால் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல இடங்களில் மின் கம்பம் பலத்த சேதம் ஏற்பட்டு முறிந்துவிட்டது தகவலறந்துபொதுமக்கள் மின்சார வாரிய அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் ‌விவசாயம் மிகவும் பாதிப்படைந்து உள்ளதால் விவசாயிகள் கண்ணீர் கவலையுடன் உள்ளார்கள் இந்நிலையில் தகவலறிந்து மின்சாரத் துறை வாரியாக அலுவலர்கள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக கடமலை மயிலை ஒன்றியத்தில் துரித பணியை மேற்கொண்டு வருகிறார்கள் இதுகுறித்து விவசாயி ஜெயராஜ், கூறுகையில் ஒவ்வொரு மாதத்திலும் சூறாவளி காற்று மழையுடன் கனமழை பல சேதங்களை ஏற்படுத்தி வருகிறது இதனால் இதுவரையும் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட வேறு வழி இல்லை எனவே பாதிப்பு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான நிவாரணம் வழங்க வேண்டும் இல்லையெனில் விவசாய தொழிலை விட்டுவிட்டு வேறு மாவட்டத்திற்கு இடம்பெயர வேண்டும் இதை தவிர வேறு வழி இல்லை என்றனர் இதுகுறித்து சிங்கராஜபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆயுதவள்ளிமணிமாறன், கூறுகையில் ஏற்கனவே பெய்த கன மழையில் பல விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை தற்போது கடுமையான பாதிப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *