பட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

 

பட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து பரமக்குடி தாலுகாவில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தன.

பரமக்குடி அருகேயுள்ள
காமன்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனிதா முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மக்களை தொடர்ந்து அவமதித்து பேசிவரும் தி.மு.க.நிர்வாகி ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும்,தி.மு.க.நிர்வாகிகளை கண்டித்தும் கோஷமிட்டனர். பட்டியலின மக்கள்  பரமக்குடி பொன்னையாபுரம், காமன்கோட்டை  மற்றும் பார்த்திபனூரில் நடந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.3 மையங்களிலும் நடந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து 200  மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *