போகலூர் ஒன்றியத்தில் ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் – யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் தகவல்.

போகலூர் ஒன்றியத்தில் ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் – யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் தகவல்.

போகலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
ஆணையாளர் ராஜகோபாலன் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :-

கதிரவன் : யூனியன் அலுவலகத்தில் தனியாக சுத்தகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கும்,அலுவலக பயன்பாட்டிற்கும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

ஆணையாளர் :

இதுகுறித்து அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

ராமசாமி : குறுங்காடு வளர்ப்புத் திட்டம் மாவிலங்கை கிராமத்தில் மட்டும் ஏன் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற ஊர்களிலும் ஏன் செயல் படுத்தவில்லை.
துணைத் தலைவர் :
மாவட்ட கலெக்டர் அந்த பகுதியை பார்வையிட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் அங்கு அமைக்க கூறியுள்ளார்.

கதிரவன் : வளர்ச்சித் திட்டப் பணிகளை அனைவருக்கும் சமமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆணையாளர் : இதுகுறித்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஆலோசித்து முடிவு செய்வோம்.
ராமசாமி : போகலூர் ஒன்றியத்தில் பணியயாற்றி வரும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறார்களா? அவர்கள் பணி எவ்வாறு உள்ளது.
ஆணையாளர் : யூனியனில் 30 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர்.ஒவ்வொரும் ஒவ்வொரு பகுதிகளுக்குச் சென்று பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

இதில் கவுன்சிலர்கள் காளீஸ்வரி, தேன்மொழி, முருகேசுவரி, காளிதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)செல்லம்மாள் நன்றி கூறினார்.

பின்பு யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது :

போகலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை நல்லமுறையில் செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.

15 வது மத்திய நிதிக்குழு மானியத்தின் மூலம் பொட்டித்தட்டி ஆதி திராவிட காலணியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், முதலூர் ஊராட்சி துரத்தியேந்தல் கிராமத்தில் ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை அமைத்தல்,அ.புத்தூர் சாலையில் இருந்து முத்துசெல்லாபுரம் சாலையில் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் உள்பட மொத்தம் ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளில் கழிப்பறைகள் அமைத்தல், கழிவு நீர் வாய்க்கால் கட்டுதல்,ஆழ்குழாய் அமைத்து சின்டெக்ஸ் அமைத்து பைப் லைன் விரிவாக்கம் செய்தல் உள்பட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற உள்ளது.இவ்வாறு கூறினார்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *