கொரோனா நோயாளிகளின் தனியார் மருத்துவமனை செலவுகளை அரசே ஏற்க வேண்டும் -திருநாவுக்கரசர் எம்பி வலியுறுத்தல்.

 தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறும் நிலையில் ,தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகளை அரசு ஏற்க வேண்டு என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்”    கொரோனாநடவடிக்கையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, தமிழக அரசு மக்களை  வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், முக கவசம் அணிய வேண்டும் என்று  சொல்வது முக்கியமல்ல, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய மாநில அரசு தலா ரூ. 7,500  வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைக்க வேண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது சரியாக இருக்காது. அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைநகர் மற்றும் முக்கிய நகர்ப்பகுதிகளில் கொரோனா ஆய்வு மையங்களை ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில்  கொரோனா சிகிச்சை  இலவசமாக அளிப்பது போல், தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் 25 %  கொரோனா  சிகிச்சைக்கு  படுக்கைகள் ஒதுக்கீடு செய்வது போதுமானது அல்ல 50% படுக்கை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.ஏழை-எளிய நடுத்தர மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறினார். உடன்   மாவட்ட செயலாளர் தொய்வேந்திரன்,  நகர் செயலாளர் அப்துல் அசீஸ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சோ.பா. ரங்கநாதன், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *