நல்ல தரமான   விதையை  விதைத்தால். அதிகமான லாபம் தரும் பரமக்குடி விதை பரிசோதனை அலுவலர் தகவல்.

நல்ல தரமான விதைகளை விதைப்பதால் அதிக மகசூல் பெற்று விவசாயிகள் அதிகபடியான  லாபத்தை பெற முடியும் என பரமக்குடி விதை பரிசோதனை  அலுவலர் சிங்கார லீனா தகவல் தெரிவித்துள்ளார்.
நல்ல தரமான விதை என்றால் புறத்தூய்மை குறைந்தபட்சம்  98% இருக்கவேண்டும். விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இரு தன்மையானது குறைவாகவோ அதிகமாகவோ இருக்கக்கூடாது சரியான அளவில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நீண்ட நாட்கள் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.நெல்லில் அதிகபட்சமாக 13% ஈரப்பதமும் மற்ற தானியங்களுக்கு 12% ஈரப்பதம் இருக்க வேண்டும்.பயறுகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு 9% கத்தரி மிளகாய் தக்காளி ஆகியவற்றுக்கு  8% இருக்க வேண்டும். முளைப்புத்திறன் உள்ள விதைகளை விதைப்பதன் மூலம்  மூலம் அதிக எண்ணிக்கையிலான பயிர்கள் பராமரிக்கப்பட்டு அதிக மகசூலை பெற முடியும் நெல்லுக்கு முளைப்புத்திறன்  80 % பயறு வகைகளுக்கு 75%, மிளகாய் 60% தக்காளி 70% , வெண்டைக்காய் 65% கத்தரி 70% நிலக்கடலை 70%  அவசியமா இருக்க வேண்டும். ஆகையால், விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள்,விதை விநியோகஸ்தர்கள் விதையின் முளைப்பு திறனை அறிந்து உபயோகிக்கவேண்டும்  என பரமக்குடி விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா தெரிவித்துள்ளார்.அப்போது, வேளாண்மை அலுவலர்கள் ஜெயந்திமாலா, முருகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *