நெல்மடூர் ஊராட்சி குறுங்காடுகள் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆய்வு .ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் கிராம ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள் திட்டத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவருக்கு வீரராகவராவ் பாராட்டு தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளில் 1000 குறுங்காடுகள் அமைத்திட திட்டமிடப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்தும், குப்பைக்கழிவுகள் சேர்ந்தும் பயன்பாடற்ற நிலையிலுள்ள இடங்களை தேர்வு செய்து சுத்தப்படுத்தி அதில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் பரமக்குடி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஆலோசனைப் படி, கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரதீப்குமார் உத்தரவில் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில், 2019-2020ம் ஆண்டிற்கான குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊராட்சியில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கம்பிவேலி அமைத்து பாதுகாப்பான முறையில்  புங்கன், ஆவிநாவல், நாட்டுபாதாம், சீதாப்பழம், கொய்யா, பெரிய ,சிறிய நெல்லி, நாட்டு பூவரசு வேம்பு புளி, வாகை என 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதல் ஊடுபயிறாக அகத்திக்கீரை, பொன்காங்கன்னிக்கீரை, வெள்ளைப் பொன்னங்கன்னி கீரை, பச்சைப் பொன்னங்கன்னி கீரை, தண்டங்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை என 8 வகை கீரைகளும், கத்தறிக்காய், முள்ளங்கி, வெண்டக்காய் என பல வகை காய்கறிகளும் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் குறுங்காடுகள் திட்டத்தை பார்வையிட்டார், அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் எடுத்துக்காட்டாக நெல்மடூர் கிராம ஊராட்சி குறுங்காடுகள் திட்டத்தை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்து கிராம ஊராட்சி தலைவர் சுகன்யாவுக்கு பாராடு தெரிவித்தார். மாவட்டத்தில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் குறுங்காடுகள் அமைப்பது மற்றும் பராமரிப்பது குறித்து  பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யப்படும் என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி )சந்திரமோகன் பரமக்குடி வட்டாட்சியர் சேகர்,நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *