கீழப்பெருங்கரை கேழ்வரகு விதை பண்ணை.இணை இயக்குனர்  ஆய்வு.

பரமக்குடி அருகே உள்ள கீழப்பெருங்கரையில் கேழ்விரகு விதை பண்ணையை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா கள ஆய்வு செய்தார். பரமக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக பரமக்குடி அருகே உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள  இராகி(கேழ்வரகு)  சிஓ.51  விதைப்பண்ணையை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது,  மாதவன் என்பவர் வயலில் இராகி நாற்றிளை  வரிசையாக நடவு செய்யும் பணியினை பார்வையிட்டு,நாற்று நடும்போது நாற்றுக்கள் உயிர் உரங்கள் மற்றும் உயிர் காரணிகளை கொண்டு நேர்த்தியாக நடவு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார்.  நடவு செய்யும் முன் சிறுதானியங்கள், நுண்ணூட்டச்சத்து ஏக்கருக்கு 5 கிலோ வீதம் போதுமான அளவு மணலுடன் கலந்து இடப்பட்டது. இனிவரும் காலங்களில் அதிகமான விதைப் பண்ணைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த கள ஆய்வில் உதவி விதை அலுவலர் வெற்றிச்செல்வன், பரமக்குடி வேளாண்மை உதவி  இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் (விதைச்சான்று) சக்திகனோஷ்,விதைச்சான்று அலுவலர் சீராளன், பரமக்குடி வேளாண் அலுவலர் அபிநயா ஆகியோர் உடனிருந்தனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *